எழுத்தாளர்.திரு.கௌதம சன்னா
ஆளுமா டோலுமா..
மெட்ராஸ் மொழி என்பது மெட்ராசின் அற்புதங்களுள் ஒன்று, அது இப்போது வழக்கொழிந்து வருகிறது. மெட்ராஸ் தவிர்த்து பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு மெட்ராசைப் பற்றி ஏதும் தெரியாது, அவர்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவர்களால் அதனோடு ஒன்ற முடியாமலேயே இறந்து போனவர்கள் ஏராளம். மெட்ராஸ் என்பது உயிர்ப்பானது. அதற்கு பேதம் கிடையாது. எப்போதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான் மெட்ராஸ். அற்பமான சில சினிமாப் பிறவிகள் மெட்ராசின் இயல்பை புரிந்துக் கொள்ளாமல் தவறாக சித்தரித்து வருகிறார்கள். எனினும் மொழியியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு, வட்டார மொழிகள் எப்படி இருக்கும் என்று ஆய்பவர்களுக்கு இது பயன் தரும். சமூகத்தினை புரிந்துக் கொள்ள உதவும் பன்முகத் தன்மைக்கு ஏற்றம் தரும்.
ஆளுமா – ஆள், மனிதன் / (தமிழ்)
டோலுமா –டோலக் தோல் இசைக் கருவி (உருது)
ஐசா லக்கடி – இந்த மாதிரி கொம்பு(உ)
மாலுமா – மால் – பணம் (உ)
தெறிச்சு – கலைத்து (த)
கலீச்சுனு – அசுத்தம் ( உருது)
கிராக்கி வுட்டா –கவனித்தால் (customer என பொருள், சிலேடையாக பயன்படுத்தப்பட்டுள்ளது (உ)
சாலுமா – solve (ஆங்கிலம்)
அறிக்கல்லு – அடுப்புக் கல் (த)
கரிக்கல்லு – பெரிய தவா அல்லது தோசைக்கல் (த)
கொத்துவுட்டா – சாப்பிட்டா (சிலேடைச்சொல்) (த)
கலக்கலு – கலக்கல், கலாட்டா (த)
பளுச்சினு – பளிச் (த) அல்லது Bleach என்பது மருவி பளிச்சென
பளபளக்குது – பளபளப்பு (த)
மிட்டா மேல – இனிப்பு மேல் (இனிப்பு பலகாரம் மேல் அலங்காரம் செய்தல்)(உ)
லோக்கல் – Local-u – பகுதி, உள்ளூர் (ஆங்கிலம்)
—————–
டமுக்குனா.- டம், டமுக். ( தாள ஓசை) (த)
டுபுக்குனா – டும், டுமுக் (தாள ஓசை) (த)
டோலக்க தாம் – டோலக் இசைக்கருவி (உ)
குமுக்குனா – வாசி, வாசித்தால் ( ஓசை வினைச்சொல்) (த)
டுபுக்குனா – திடுக்,திபுக், திடும், திடுமென மருவல் டுபுக் (த)
டுமாங்கோலி – பெரிய கோலி உருண்டை. டுமாங் Tomb போல பெரிய (ஆ)
எப்டி – எப்படி போனா – போனால் (த)
எனகென்னா – எனக்கு என்ன? (த)
———————
கருக்குனா – கருக் (கடிக்கும் சத்தம்) (த)
முறுக்குனா – கடிக்கும் சத்தம் (கருக்-முருக்) (த)
தவுட்டையதான் – தவிட்டு மூட்டை அல்லது சுமை (த)
எறக்குனா – இறக்கினால் (த)
இருக்குனா – இருக்கிறது(த)
சரக்குனா – சாராயம் (த)
ஒண்டியாந்தா – தனியா இருந்தால் , ஒன்டி ஆளாக இருந்தால்(த)
உனகின்னா – உனக்கு என்ன, உனக்கென்ன (த)
——————
ராங்கா – Wrong,
ராவாதான் – Raw (material) அல்லது அப்படியே (ஆ)
ரவுடியானேன்- Rowdy (ஆ)
ஜோவாதான் – பெரிய Jo (ஆ)
துட்ட– துட்டு -பணம் (தெலுங்கு)
குடுத்துபுட்டா – கொடுத்துவிட்டால் (த)
குத்து வுயும் – குத்து விழும்(த)
சோவாதான்– Showவாத்தான் (ஆ)
ராபரி – Robbery (ஆ)
போர்ஜரி – Forgery – (ஆ)
மொக்க – கூர்ப்பு இல்லாத, சுதாரிப்பு இல்லாத, மந்தமான(த)
சீன் – Scene-u (ஆ)
போர் -Bore-uda (ஆ)
மர்டர் – கொலை Murder பண்ணிப்புட்டா – செய்துவிட்டால்(ஆ)
மஜா மேல – சுவைத்ததின் பேரில் (உ)
பேருடா – பேர், பெயரெடுத்தல், பிரபலமாதல் (த)
——————
எகுருணா – எகிறினால்(த)
தொகுருணா – தொகுரல், துவர்த்தல், துவர்ப்பு (த)
சைலன்ட் ஆதான் – அமைதியாகத்தான் Silent- (ஆ)
நவுருணா– நகரு, நகர்தல் (த)
தொழுகுல – விளா, விளாவில் (த) சொருவுனா – செருகல்(த
தொக்கா– எளிதாக (த)
அவுல-அவல், (அவல் போல கையில் சிக்கினால்) (த)
மாட்டுனா – சிக்கினால் (த)
பொருளதான் – கத்தியைத்தான் , சிலேடைச் சொல் (த)
இடுப்புல – இடைப்பகுதியில் (த)
வச்சேன்– வைத்து, வைத்தேன் (த)
வயசு துடுப்புல– இளமைத் துடிப்பில், இளமை வேகத்தில் (த)
இழுக்குறேன்– (கத்தியால்) அறுப்பு, சிறு வெட்டு, (த)
பொளக்குறேன் –(கத்தியால்) வெட்டு, பெரிய வெட்டு (த)
ரவுடியின்னு – Rowdyன்னு (ஆ)
அதுப்புல – திமிர், திமிரு (த)
………………..
கெத்தவுடாத –கௌரவத்தை விடாதே
பங்கு – பங்காளி
நீ ஏறுனாலும் – ஏறு, ஏற்றம் (த)
வாருனாலும் – வீழ்தல், (காலை வாரி விட்டான் என்பதைப் போல) (த)
எவன் – எவரும் சீறினாலும் – கோபம் கொண்டாலும் (த)
மாறுனாலும் – மாறினாலும் எதிர்த்தாலும் (த)
கெத்தவுடாத – கௌரவத்தை விடாத (த)
மொழியில் ஆய்வாளருக்குப் பயன்தரும். எப்போதோ நான் தொடங்கிய Madras Slang Dictionary தொகுப்பிலிருந்து.
சன்னா