Home Audio மதராச பட்டிணம்

மதராச பட்டிணம்

by Dr.K.Subashini
0 comment

திரு.நரசய்யா  மதராச பட்டிணம் என்ற சிறந்த ஒரு வரலாற்றுப் பதிவு நூலினை எழுதியவர்.  தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட இவர்  ஒரிஸ்ஸாவின் பர்ஹாம்பூரில் பிறந்தவர். தமிழ் பயின்றது பள்ளி நாட்களில்; 1949 மெரீன் எஞ்சினீயரிங் பயிலச் சென்றது பூனா அருகில் லோனவாலாவின் அழகுச்சூழ்நிலையில்;

1953 லிருந்து 1963 வரை கடற்படைக் கப்பல்களில்; அப்போது ஒரு வருடம் அயர்லாந்திலுள்ள பெல்ஃபாஸ்ட்டில் – கப்ப்ல் கட்டும் தள்த்தில் பயிற்சி – தொடர்ந்து விக்ராந்த்தில் பணி (விமானந்தாங்கிக் கப்பல் துறையில்)

  • கடலோடியான இவரது பணிக்காலம் சுவாரசிய்மானது.
    – 1963 – 1965 வணிகக் கப்பல்களில்
    – 1965 – 1991 விசாகபட்டினம் துறை முகப்பணி 1991 ல் ஓய்வு
    – 1991 – கப்பல் – துறை முகப்பயிற்சி நிலையத்தில் விரிவுரையாளர்.
    – 1994 – 96 உலக வங்கி ஆலோசகர்இன்றும் MBA வகுப்புகள் AMET UNIVERSITY யில் எடுத்துக் கொண்டிருக்கிறேன்

இவரது இலக்கியப் படைப்புக்கள்:

தமிழ் 

இவரது எழுத்துக்களில்  சுமார் 100 சிறுகதைகள் வெளி வந்துள்ளன.

நூல்கள்:

1) கடலோடி (மூன்று பதிவுகள்)
2) சாதாரண மனிதன் – சிட்டியின் வாழ்க்கை வரலாறு
3) கடல் வழி வணிகம் (அரசு பரிசு பெற்றது)
4) சொல்லொணாப்பேறு (மூன்றாவ்து தொகுப்பு அரசு பரிசு)
5) மதராசபட்டினம் (அரசு பரிசு)
6) தீர்க்கரேகைகள் (இரண்டாவ்து தொகுப்பு இரண்டு பரிசுகள்)
7) நரச்ய்யா கதைகள் (மதுரைக் கல்லூரியில் ஆறு வருட்ங்கள் துணைப் பாட நூல்)

ஆங்கிலம்

1 Madras (1639 – 1947)
2. English and Tamil co-authored with S Muthiah Overcoming challenges – வெற்றியின் சாதனை
presently teaching subjects related to sea and ports in marine institutes of Chennai

இவர் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக மதராச பட்டிணம் நூலை எழுதும் போது ஏற்பட்ட அனுபவங்களையும், மதராசின் வரலாற்றுச் செய்திகளையும் இங்கு நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார். விடுமுறைக்கு கனடா சென்றிந்த்த திரு.நரசய்யா அவர்களை gtalk வழியாக பேட்டி கண்டு பதிவு செய்தவர் முனைவர்.க.சுபாஷிணி.

பாகம் 1 :

மதராச பட்டிணம் அறிமுகம்

[பதிவு செய்யப்பட்ட நாள்: 21/11/2008]

பாகம் 2 :

இங்கிலீஷ்காரர்கள் வந்த விதம். -1

[பதிவு செய்யப்பட்ட நாள்: 21/11/2008]

பாகம் 3 : -இங்கிலீஷ்காரர்கள் வந்த விதம். -1-மதராசில் போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், மற்றும் இங்கிலீஷ்காரர்கள்.-மசூலிப் பட்டினத்தினத்திலிருந்து ஆந்திராக்காரர்கள் மதராசிற்கு கொண்டு வரப்பட்ட வரலாறு.-மதராசிற்கு வந்த முக்கிய நபர்கள்.

[பதிவு செய்யப்பட்ட நாள்: 21/11/2008]

பாகம் 4 :

இங்கிலீஷ்காரர்கள் படிப்படியாக ஆளுமையை அடைந்த விதம்.

[பதிவு செய்யப்பட்ட நாள்: 21/11/2008]

பாகம் 5 : மதராச பட்டினத்தின் வளர்ச்சிக்கு சிறப்பு சேர்த்தவர்கள்சிறப்பு மிகு ஆங்கிலேயர்கள் – திருவல்லிக்கேணியில் 27 கிணறுகள்..ஓலைச்சுவடிகளை சேகரிப்பினை தொடங்கியவர்..[பதிவு செய்யப்பட்ட நாள்: 21/11/2008]

பாகம் 6 : – தலை நிமிர்ந்து நின்ற பெண்கள் I – முத்துலக்க்ஷி ரெட்டி- தேவதாசிகள் நிலை- அடையார் ஔவை இல்லத்தின் தோற்றம் [பதிவு செய்யப்பட்ட நாள்: 21/11/2008]

பாகம் 7 : – தலை நிமிர்ந்து நின்ற பெண்கள் II – சுபலக்ஷ்மி அம்மாள், கோதை நாயகி அம்மாள்- விதவைகள் மறு வாழ்வு -சுபலக்ஷ்மி அம்மாள்- தென்னகத்தின் முதல் பெண் பட்டதாரி – சுபலக்ஷ்மி அம்மாள்- விதவை இல்லம் / சாரதா ஆசிரமம் தொடங்கிய வரலாறு- ‘ஜகன் மோகினி’ பத்திரிக்கை ஆசிரியை கோதை நாயகி அம்மாள் [பதிவு செய்யப்பட்ட நாள்: 21/11/2008] 

Making of Madras – Spit of Sand City http://www.tamilheritage.org/kidangku/nara_m/THFspit_of_sand.pdf Interview with Mr.Narasiahhttp://www.tamilheritage.org/kidangku/nara_m/naraint.pdf

You may also like

Leave a Comment