Home Interview சென்னை அருங்காட்சியகம் [Chennai Museum]

சென்னை அருங்காட்சியகம் [Chennai Museum]

by Dr.K.Subashini
0 comment
THFi Chennai Museum

அருங்காட்சியகங்கள் விலை மதிப்பு இல்லாத மனித குல வரலாற்றின் பல்வேறு பரிமாணங்களை தேடி சேகரித்து பாதுகாத்து ஆய்வு செய்து, தொடர்ந்து நாம் நம் பழமையை உணர நமக்கு வாய்ப்புக்களை வழங்கும் கல்விக் கூடங்கள்.

எழும்பூர் மியூஸியம் என்று எல்லோராலும் சாதாரணமாக குறிப்பிடப்படும் சென்னை அரசு அருங்காட்சியகம், ஆசிய நாடுகளின் மிகப் பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று.  இந்தியாவின் கல்கத்தா அருங்காட்சியகத்து அடுத்து இரண்டாவது பெரிய அருங்காட்சியகம் என்ற பெருமையையும் பெருவது இந்த அருங்காட்சியகம்.

1 மணி நேர பதிவாக இந்த விழியப் பதிவு அமைந்திருக்கின்றது. ஆக நன்கு நேரம் எடுத்துக் கொண்டு அமர்ந்து பார்த்து ரசிக்கலாம். இந்தப் பதிவில் அருங்காட்சியக கல்வித்துறை தலைவர் டாக்டர். பாலசுப்ரமணியம் மிக விரிவான விளக்கத்தை தமிழில் வழங்குகின்றார். இந்த விளக்கங்கள் குறிப்பாக
அருங்காட்சியகத்தின் ஆரம்ப கால நிலை
இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பு சேகரிப்புக்கள்.
அருங்கலைச்சிற்பங்கள் தொகுப்பின் போது நிகழ்ந்த சிக்கல்கள்
இந்த அருங்காட்சியகத்தில் சேகரிக்கப்பட்ட கலைப்பொருட்கள் 
இங்கு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டதால் இங்கிலாந்தின் லண்டன் அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்படாமல் தமிழகத்திலேயே இருக்கும் நிலை அமைந்த விஷயங்கள்
கால நிலைகளில் சிற்ப வடிவங்கள் – பல்லவர், சாளுக்கியர், முற்காலச் சோழர், பிற்காலச் சோழர், நாயக்கர் கால சிற்பங்கள், தற்கால சிற்பங்கள்
யட்ஷி, தாந்திரீகம் பற்றிய தகவல்கள்
வெங்கலச் சிலை செய்யப்படும் விதம்
வெங்கலச் சிற்பங்கள் சேகரிப்புக்கூடம்
சைவம், வைஷ்ணவம் வெண்கலச் சிலைகளின் கூடம்
காசுகள், சின்னங்கள்
சிலைகள் பஞ்ச லோகத்தில் சிலை செய்யப்படுவதன் காரணம்
ஆகிய விஷயங்கள் பேசப்படுகின்றன.

குறிப்பு:
இந்தப் பதிவை நான் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் திரு.நரசய்யா அவர்கள். என்னோடு சேர்ந்து மிகுந்த ஆர்வத்தோடு முழு பதிவின் போதும் உடனிருந்து உதவிய இவருக்கு நம் மனமார்ந்த நன்றி. புகைப்படங்களில் சிலவற்றை எடுத்து உதவிய நண்பர் கோபுவுக்கும் நம் நன்றி.

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

You may also like

Leave a Comment