773
மெயின் ரோடு, ஆசீர்வாதபுரம், ஜார்ஜ் டவுண், சென்னை-1
சதா சகாய மாதா (சதா சகாயத் தாய் அல்லது இடைவிடா சகாய மாதா) (Our Lady of Perpetual Help) என்னும் பெயர் இயேசுவின் தாயாகிய மரியாவுக்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாகும். இலத்தீன் மொழியில் “Sancta Mater de Perpetuo Succursu” என வழங்கப்படும் இப்பெயரைத் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் மரியாவை அழைக்கப் பயன்படுத்தினார். இப்பெயர் கிபி 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிசான்சியக் கலையில் அமைந்த ஒரு மரியா திருவோவியத்தோடு தொடர்புடையதாகும்.
இத்திருவோவியத்தின் முன் முழந்தாளிட்டு பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்கரும் மரபுவழிக் கிறித்தவர்களும் இறைவேண்டல் செலுத்திவருகின்றனர்.
சதா சகாய மாதா திருவிழா சூன் மாதம் 27ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. சகாய அன்னையின் நவநாள் பக்தி முயற்சி புதன் கிழமைகளில் நடைபெறுகிறது.
- Churches
- Worship places
- Lady of Perpetual Help