ஸ்ரீமத் ராமலிங்க சுவாமிகள் மடாலயம்
வள்ளலார் எனும் வடலூர் சி. இராமலிங்கம்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் (1823-1874) தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்த சிதம்பரம் இராமலிங்கம் எனும் வள்ளலார் குறித்த தொன்மங்கள் சுவையானவை. 1823ஆம் ஆண்டில் மருதூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். பிறந்த அடுத்த ஆண்டே அவரது குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது. இளமை வாழ்க்கை சென்னையில் தொடங்கியது. அவர் தமது 12ஆம் வயதில் அவர் கவிதை பாடத் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. 1835 முதல் வள்ளலார், புற உலகில் செயல்படத் தொடங்கினார். இக்காலங்களில், திருவொற்றியூர், திருத்தணிகை ஆகிய இடங்களில் உள்ள இறைவனைப் பற்றிய பாடல்களைப் பாடியவராக வாழ்ந்தார். இவைகளே பின்னர் 1867இல் ஐந்து திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டவை. 3269 பாடல்களை இக்காலங்களில் பாடியிருக்கிறார்.
மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் நிகழ்த்திய இறுதிப் பேருபதேசம் என்பது, அவர் உலகத்தை மறுப்பதை உறுதிப்படுத்துகிறது. உலக நிகழ்வுகளை மறுக்கிறார். ஒளி வடிவம் பற்றியே பேசுகிறார். இச்சூழலில், ஜனவரி முப்பதாம் தேதி 1874இல் மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாகத்தில், உட்புறம் தாழ்ப்பாளைப் போட்டுக் கொண்டார். அந்நாள் அவரது இறுதிநாள்.
வள்ளலார் என்ற மனிதர், தமது கடைசி ஆண்டுகளில், சாதிக்கு எதிராக, சமயத்துக்கு எதிராகப் போராடினார். பசிப்பிணி போக்கும் தயவே வாழ்க்கை என்று பேசினார். ஜீவ காருண்யமே தமது இலட்சியம் என்று வாதிட்டார்.
சென்னை, திருவொற்றியூரில் அமைந்துள்ள ஸ்ரீமத் ராமலிங்க சுவாமிகள் மடாலயம் பற்றிய காணொளிப் பதிவினை இங்கு நாம் காணலாம்.
- வள்ளலார்
- ஜீவகாருண்யம்
- வள்ளலார் மடம், திருவொற்றியூர்