304
தாம்பரத்தில் இயங்கும் கல்லூரிகளில் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கல்விக்கூடம். ரெவரெண்ட் மில்லர் ஆரம்பித்து உருவாக்கிய கல்லூரி இது. மக்களின் கல்விக்காக சேவையாற்றிய இவர் உயர்தரமான கல்வியை மக்கள் பெறவேண்டுமென விரும்பினார். மிக ஏழ்மையான மக்களுக்கும் கல்வி எட்டாக்கனியாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்துடன் இந்தக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. முதலில் ஆண்களுக்கு மட்டுமே என இருந்த இந்தக் கல்லூரி பின்னர் பெண்களுக்கும் கல்விக் கதவுகளைத் திறந்தது. இச்செய்திகளை பேட்டியின் வழி வழங்குகிறார் தமிழக வரலாற்று அறிஞர் திரு.நரசய்யா.