அத்தோ பர்மாவின் பாரம்பரிய உணவும் தமிழகத்தின் அன்றாட உணவும்……
1756ம் ஆண்டு ஏற்பட்ட மாபெரும் பஞ்சம் பல லட்சம் ஊயிர்களை காவு வாங்கியது அதன் பின் மக்கள் பிழைப்புக்காக மலேசியா , சிங்கப்பூர், மொரிசியஸ் , பர்மா, போன்ற நாடுகளுக்குப் பிழைப்பு தேடி நாடோடிகளாகச் சென்றனர். அங்கு சென்று ஐந்து தலைமுறைகளாக வாழ்ந்து வந்த நிலையில் பர்மாவில் மட்டும் 1964ல் நெருக்கடி காரணமாக அங்கிருந்து தமிழர்கள் தன் சொந்த ஊருக்கே அகதிகளாக அனுப்பப்பட்டனர். அப்போது அன்றைய தமிழக முதல்வர் பக்தவச்சலம் அவர்கள் அம்மக்களுக்கு ஒரு முகாமை ஏற்படுத்திக் கொடுத்தார் பின் பல வருடங்கள் கழித்து எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் முதலமைச்சர் ஆன பொழுது அவர்களுக்கு வசிக்க இடம் கொடுத்தார். வியாசர்பாடி சர்மா நகர், ஐ.ஓ.சி. நேதாஜி நகர் , கத்திவாக்காம் அன்னை சிவகாமி நகர்
இந்த மூன்று இடங்களில் தான் இன்றளவிலும் பர்மா தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
இங்கு வந்த மக்கள் தங்களுக்கான தொழிலை தொடங்குவதில் ஆர்வம் காட்டினர். அதன் வழியாக பல தொழில்களை அவர்கள் சிறு முதலீடு கொண்டு ஆரம்பித்தார்கள் அதில் மிக முக்கியமானதுதான் பர்மா உணவு வகைகளான அத்தோ, பேஜோ , மொயிங்கா , கவுசே போன்றவை. இவ் உணவுகளை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்து அதன் வழி தொழிலை பெருக்கி லாபம் பார்க்க அந்த தொழில் நாளடைவில் பெரும் வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக கத்திவாக்கம் அன்னை சத்தியா நகர் மற்றும் வியாசர்பாடி சர்மா நகரில் கணிசமான அத்தோ கடைகள் உள்ளன.