877
19ம் நூற்றாண்டின் கல்விச்சேவையாளராகத் திகழ்ந்தவர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார். இவர் 1881ம் ஆண்டு பிறந்தார். காரைக்குடி பகுதியில் கானாடுகாத்தான் பகுதியில் வசித்தவர். இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் கல்வி பயின்ற இவர் திரும்பியதும் தமிழகத்தில் பல கல்விக்கூடங்களை நிறுவினார். தமிழிசையில் ஈடுபாடு கொண்டவர் இவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவரது பெயர் சொல்லும் கல்விக்கூடமாக இது திகழ்கின்றது. இவரைப்பற்றிய தகவல்களை இந்தப் பேட்டியில் காணலாம். பேட்டியை வழங்குபவர் தமிழக வரலாற்று அறிஞர் திரு.நரசய்யா.