டிஜிட்டல் மெட்ராஸ் திட்டம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க உலக நகரங்களுள் ஒன்று என்ற பெருமை மெட்ராஸுக்கு உண்டு. இன்றைய காலகட்டத்தில் மெட்ராஸ் நகரில் உள்ள பண்டைய புராதனச் சின்னங்களும், வரலாற்றுச் சின்னங்களும், ஆறுகளும், ஏரிகளும், குளங்களும் பல்வேறு காரணங்களால் நாளுக்கு நாள் அழிந்தும் மறைந்தும் அதன் பெறுமைகளை இழந்து கொண்டிருக்கின்றன. மெட்ராஸின் வரலாற்றை அறிந்து, இந்த நகரின் சிறப்பை உணர்ந்து, இதன் வரலாற்றைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதுதான் தமிழ் மரபு அறக்கட்டளையின் டிஜிட்டல் மெட்ராஸ் திட்டம்.
— டாக்டர்.க.சுபாஷிணி, டிஜிட்டல் மெட்ராஸ் திட்ட பொறுப்பாளர்.