Seven Wells North, George Town, Chennai, Tamil Nadu 600001.
Stanley Medical College (SMC) is a government medical college with hospitals located in Chennai, Tamil Nadu, India. Though the original hospital is more than 200 years old, the medical college was formally established on 2 July 1938.
சென்னை பிராட்வேயில் அமைந்துள்ள புகழ் பெற்ற “ஸ்டான்லி அரசினர் மருத்துவமனையில் ஒரு நினைவுத்தூண் அமையப் பெற்றுள்ளது. இதன் பின்னணியில் உள்ள வரலாற்று சம்பவம் பின்வருமாறு:
முதல் உலகப்போர் நடந்தபோது அந்த போரில் பங்கேற்ற வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்யும் போது வீர மரணம் அடைந்த மருத்துவர்களுக்கு எழுப்பப்பட்ட நினைவுத்தூண் ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவர்கள் சென்னை மாகாணத்தின் சார்பில் போர் முனையில் பங்கேற்றவர்கள் என்கின்ற குறிப்பும் இந்த கல்வெட்டில் உள்ளது.
மற்றொரு சுவாரஸ்யமான பெயரும் இந்த மருத்துவமனைக்கு உண்டு. வறட்சி காலத்தில் இந்த இடத்தில் கஞ்சி அளித்துப் பொதுமக்களுக்கு உதவும் இடமாக இருந்ததனால் ”கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி” என்றும் மக்களால் அன்போடு அழைக்கும் வழக்கமும் உண்டு.
- நினைவுத்தூண்
- கஞ்சித்தொட்டி ஆஸ்பத்திரி