சென்னையில் ஏராளமான மரபுச் சின்னங்கள் இருக்கின்றன,. ஆனால் அவை எங்குள்ளன.. அவற்றின் வரலாற்றுப் பின்னனி என்ன? அவற்றின் இன்றைய நிலை என்ன? இந்தப் புராதன சின்னங்கள் இன்று சரியாகப் பாதுகாக்கப்படுகின்றனவா..? என அறிந்து கொள்வது அவசியம். சென்னையில் வாழ்கின்ற மக்களில் பலருக்கு அருகாமையில் உள்ள பல வரலாற்றுச் சின்னங்களைப் பற்றி தெரியாத நிலை இருப்பதைப் பார்க்கிறோம். அதனால் பல வரலாற்றுச் சின்னங்கள் நகர விரிவாக்கத்தில் உடைக்கப்பட்டும், அகற்றப்பட்டும், சிதைக்கப்பட்டும், பராமரிப்பின்றியும் மக்கள் கவனத்திலிருந்து மறைந்து போகின்றன. இதனால் சென்னையின் வரலாற்று முக்கியத்துவம் அங்கீகரிக்கப்படாமல் போகின்ற நிலை ஏற்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு வார இறுதி நாளில் வட சென்னையில் இருக்கின்ற வரலாற்று பின்னனி கொண்ட சில சின்னங்களைப் பொது மக்கள் அறிந்து கொள்ளவும் அவற்றின் வரலாற்றுப் பின்னனியைத் தெரிந்து கொள்ளவும் ஒரு மரபுப் பயணத்தை ஏற்பாடு செய்திருக்கின்றோம். சென்னையில் எளிதாக பயணம் செய்வதற்கு இருசக்கர வாகனங்களில் பயணிப்பது எளிது. இந்தப் பயணத்தில் கலந்து கொள்வோர் இரு சக்கர வாகனத்தில் இருவராக இணைந்து வரலாம். கட்டணம் ஏதும் இல்லை. மேலதிக தொடர்புகளுக்கும் விபரங்களுக்கும் அறிவிப்பினைக் காண்க! —
வட சென்னை – வரலாற்றுப் பயணம்
575
previous post